Vanakkam 

Tamilsanga.no   Est.2005.                           

 

Bruk Tamilsangam.no som Startside!                        Email; admin@tamilsangam.no

 

      

  -Home-  
|
  -About-  
|
  -Child&Youth-  
|
  -Banks-  
|
  -Shop-  
|
  -Job Vacancy-  
|
  Watch Online  
|
  -Travel-  

 

 "உதிரும் ரோஜா"  தொடர் கதை

மீரா தனது பெற்றோரை விட்டு ஒருகாலமும் அறியாத நபருடன் தனது வாழ்க்கையை ஆரம்பிக்க காத்து நிற்கின்றாள். வீட்டில் அவளுக்கு பின்னர் அவளது இரு தங்கைகள் விஜிதவும், ரேகாவும் கலியாண ஆரவாரங்களில் குதுகலம் கொண்டு சொந்த பந்தங்களின் வரவுக்காக காத்து நிற்கின்றனர். நோர்வே மாப்பிள்ளை என்றால் சும்மா இல்லை, அங்கு சென்ற எல்லாரும் இன்ஜினியர் இல்லையேல் டாக்டர் தான் என்றாள் மீராவின் பேத்தி ஒரு மூலையில் இருந்து. மீரவுக்கோ ஒரே கலக்கம். ரகுவை படத்தில்தான் பார்த்தாள். தொலைபேசியில் இரு தடவை தான்  பேசினாள்.

காலை விடிந்தவுடன் மாமியாருடன் விமானநிலையத்துக்கு செல்கிறாள்.  தூரத்தில் ஒரு வாட சாட்டமான ஒரவர் மீராவை நோக்கி வருகிறார். மீரா அவரை பார்த்து விட்டு இது படத்தில் பார்த்த ரகு மாதிரியே இருக்கிறதே என்று நினைத்து முடிக்கும் முன்னர் அவர் மீரா அருகே வந்து என்ன பெயர் மகேஷ், நீங்க மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்று சொல்லிவிட்டு அப்படியே செல்கிறார். மீராவுக்கு  என்ன செய்வது தெரியாமல் சற்று தடுமாறியே விட்டாள். 

சிறிது நேரத்தில் இன்னும் ஒருவர் அருகே வந்து ஹலோ நான் தான் ரகு என்று கையை நீட்டுகிறார். தனது கையில் இருந்த பூவை ரகுவிடம் கொடுக்க, ஒ சொறி நானும் நினைத்தேன் உங்களுக்கு பூ வாங்க, பட் எனக்கு சில்லறை எடுத்து செல்லும் பழக்கம் இல்லை. ஒன்லி விசா கார்ட். 
சொன்ன வித்தை கேட்டு வியப்படைந்த மீரா, அதை வெளியே  காட்டாமல் , இட்ஸ் ஓகே என்றாள்.

ஆனால் அதை விட வியப்பு படத்தில் பார்த்த ரகுவிற்கு தலையில் முடி இருந்தது.  சரி சரி சமாளிப்பம் என்று மனதை திருப்தி படுத்தினாள். ஆனால் சிறு ஏமாற்றம்  தாங்க முடியாமல், என்ன மாமி ரகுவை படத்தில் பார்த்து கன காலமோ என மெதுவாக காதில் சொன்னாள்.  மாமியார் அதை காதில் எட்த்துகொள்ளாதது போல, வாங்கோ விடிந்தால் கல்யாணம் ஆரவாரம், மகன் களைத்து போய் வந்திருக்கிறார் என்று வெளியே மகனை அணைத்த வண்ணம் செல்கிறார். அவர்கள் பின்னால் மீராவும் செல்கிறாள்.

காரிற்குள் ஏறியதும்  கடந்த வருடம் இறந்து போன அப்பாவின் நினைப்பு தான் அவளிற்கு வந்தது. அப்பா இருந்திருந்தால் இந்த கல்யாணத்துக்கு சம்மதித்தே இருக்க மாட்டார். நான் ஒரு பட்டதாரியாக வர அப்பா கனவு கண்டார், எனக்கும் வர ஆசை. அனால் அப்பா இறந்ததும் வீட்டுக்கு வருமானம் இல்லை.
பெரியப்பா ஒருவருடம் சமாளித்தார் அனால் அவருக்கும் குடும்பம் இருக்கிறது. என்ன செய்வது தெரியாமல் இருக்கும் பொது தான் பெரியப்பா கல்யாணம் பேசி ரகு குடும்பத்தினை அறிமுகப்படுத்தினார்.
அம்மாவும் வேறு வழியில்லாமல் என்னை கல்யாணம் முடித்து கொடுக்க முடிவு செய்தார்.  விஜிதாவும், ரேகாவும் ஆவது நல்லாய் படிக்க நானும் உதவிகள் செய்யலாம் என்ற கனவுடன் கல்யாணத்துக்கு சம்மதித்தேன்.
மீராவின் கண்கள் சற்று கலங்கி இருப்பதையும் கவனிக்காத ரகு, மீராவை பார்த்து  நல்லா சமைக்க தெரியுமா என்று கேட்க ஆம் என்று தலையை ஆட்டினாள்.
என்னை என்ன நினைத்தாய் அது மட்டும் தெரியாவிட்டால் நான் கல்யாணத்துக்கு சம்மதித்து இருக்கவே  மாட்டேன் என்று இறுமாப்பாக கூறினார் ரகுவின் அம்மா.
 மீராவின் கணங்கள் மேலும் கலங்கின.

சிறுவதில் இருந்தே அவளின் அப்பா கையால் சமைத்த சாப்பாடு என்றால் போதும். அம்மாவே மிகவும் ரசித்து சாப்பிடுவர்.  அது மட்டும் அல்லாமல் தீத்யும் விடுவார்.
நாம் விரும்புவதை நாம் சொல்ல முன்னரே எமக்கு வங்கியும் தந்து விடுவர். எம்மில் இருந்த பாசமும், அன்பும் தான் காரணம்.
ஒரு நாள் பள்ளிக்கூடம் விட்டு வீடு வரும் போது சில சிறுவர்கள் எனக்கு கல்லால் எறிந்து, தலையால் ரத்தம் வந்தது. வீடு சென்றதும் அதை பார்த்த அப்பாவுக்கு ஒரு நிமிடம் மூச்சே நின்று விட்டது. தடுமாறிய படி என்னை அனைத்து எனக்கு மருந்து போட்டு, அன்று இரவு முழுவதும் தூங்காமல் என்னுடன் அருகில் அணைத்தபடி படுத்திருந்தார்.  அப்போது எனக்கு வயது.  நான் சாமத்திய பட்டு இரு வருடங்கள் ஆகி விட்டன. நான் அப்பாவை பார்த்து அம்மாவையும் , எங்களையும் எவ்வளவு சந்தோஷமாக வைத்திருக்கிறீர்கள்.  எனக்கு கல்யாணம் என்று வரும் போது, எனக்கும் உங்களைப்போல ஒரு நல்ல ஒரு மனிதர் தான் வேண்டும் என்று சொன்னேன். 
சிரித்துக்கொண்டு , அதுக்கு எல்லாம் காலம் இருக்கு, எல்லாம் நீ விரும்பியது போலவே நடக்கும் என்று தலையை தடவியபடி கூறினார்...

மீரா இந்த சாமான்களை கொண்டுவா, நான் ரகுவை உள்ளே கொண்டுபோகிறேன் , அவனுக்கு நுளம்பு கடி தாங்காது, என்று கூறிய வண்ணம் காரை விட்டு இறங்கி வீட்டிற்குள் ரகுவுடன் சென்றார் மாமியார்.

சரி மாமி என்று கூறியபடி, சாமான்களை டிரைவருடன் சேர்ந்து தூக்கி வீட்டில் வைத்தாள். சரி சரி விடிந்தால் கல்யாணம், நல்ல செழிப்பாக இருக்கவேணும் போய் உண் வீட்டில் தூங்கு என்றார் மாமியார். அதற்கும் சரி மாமி என்று கூறி விட்டு தனது வீட்டை நோக்கி நடக்க, "பிள்ள .  நான கொண்டே இறக்கி விடவா என்று டிரைவர் கேட்க , இல்லை மாமா எனக்கு நடக்க வேணும் போல இருக்கிறது என்று கூறிய வண்ணம், வீட்டை நோக்கி நடந்தாள். ..

 .... தொடரும்.

 

#சத்தியா#

 

 

 

    

Gmail 

 

 

     

      

 FINN

yr.no 

 

ABCStartsiden   

ALTINN

AviNor 

Barneombudet    

Barn&Ungdom     

Banker     

Bergenkommune   

BergenTamil 

BergenTamilskole 

BergenTamilSportsClub   

BIKS

ChristianSongs

CricketOnlineTV

DeepamTV   

DFIRH   

DinSide

EmbassyIndia   

EmbassySrilanka 

Filmweb   

Forskning.no     

FotoArkivet

Handel     

HordalandFylke     

HumanRights

Jobby

KIM

Legevakten    

Lommelegen

Monster.no     

Morningstar

NAV    

Neithal

OsloKommune

Reise

Skatteetaten   

SunTV   

Telefonkatalogan

UDI:Forsiden

Wikipedia    

WriteInTamil

தமிழ்விக்கிபீடியா 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

karod_fadder.gif

 

 

 

startside.gif

 

 Matrimonial 

Bruk Tamilsangam.no som Startside!   Tamilsangam estab:1977                              
Bank konto: 3625 82 83117